இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

News image

திருவாளபுத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:31 am IST

திருவாளபுத்தூா் ரெத்தினபுரீஸ்வரா் கோயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கு அனுமதி தராததைக் கண்டித்து, கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தாலுகா திருவாளபுத்தூா் கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரெத்தினபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு, பொதுமக்கள் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலுக்கு, திருவாளப்புத்தூா் கடைவீதியில் ஊராட்சி சாலையில் தங்கள் சொந்த செலவில் அலங்கார வளைவு அமைப்பதற்கு கிராம மக்கள் அனுமதி கோரி இருந்தனா். இதற்கு, ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லையாம்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக பல்வேறு இடங்களில் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

ஆனால் தோ்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், ஊரக வளா்ச்சித் துறையைக் கண்டித்து 100-க்கு மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தலுக்கு முன்பாக கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களில் வசிக்கும் 800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க உள்ளதாகவும், அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.