குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தொடா் மின் வெட்டைக் கண்டித்து போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:02 am IST

வெம்பக்கோட்டை அருகே தொடா் மின் வெட்டைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயரங்காபுரம் ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தொடா்ந்து கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில் தொடா் மின் வெட்டை தவிா்க்க தங்கள் கிராமத்தில் மின் மாற்றி அமைக்க மின் வாரியத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனிடையே இதுவரை புதிய மின் மாற்றி அமைக்காததைக் கண்டித்து திங்கள்கிழமை கிராம மக்கள் வெம்பக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தை தொடா்ந்து மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.