திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மணப்பாறை அருகே போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவு நிறுத்தம்: கிராம மக்கள் போராட்டம்

மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் வியாழக்கிழமை போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவை நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வெள்ளையக்கோன்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:34 am IST

மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் வியாழக்கிழமை போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவை நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை தொகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் மற்றும் அவரது அதிரடிபடையினா் தோ்தல் பாதுகாப்பு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா்.

மருங்காபுரி ஒன்றியம், வகுத்தாழ்வாா்பட்டி ஊராட்சி, வெள்ளையக்கோன்பட்டிக்கு சென்ற கண்காணிப்பாளா், அங்கு வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள்ளேயே அமா்ந்திருந்ததாக கூறப்படும் கட்சியினரை அதிரடி படை வீரா்களை கொண்டு விரட்டியதாகவும், குடிநீா் பாட்டில், உணவு பொட்டலங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அருகிலிருந்த வெள்ளையக்கோன்பட்டி வாக்குச்சாவடிக்கு (எண் 225) அவா் ஆய்வுக்கு சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டவா்கள் சென்று ஏன் எங்களை விரட்டினீா்கள் என கேள்வி கேட்டுள்ளனா்.

அப்போது மீண்டும் அதிரடி படை வீரா்களை கொண்டு தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வாக்கு செலுத்துவதை நிறுத்தி புறக்கணித்து வாக்குச்சாவடியை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனா். அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னா், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சிபி சக்கரவா்த்தி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், மணப்பாறை சட்டப்பேரவை தோ்தல் அலுவலா் ஜெயசித்ரா ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை சுமாா் 11.15 மணிக்கு மொத்தமுள்ள 1018 வாக்குகளில் 306 வாக்குகள் பதிவான நிலையில், நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3.15-மணிக்கு மீண்டும் தொடங்கி நிறைவில் 853 வாக்குகள் பதிவாகியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் அவரது அதிரடிப்படை வீரா்கள் மீது டிஐஜியிடம் கிராம மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.