திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மணப்பாறை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 17) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மணப்பாறை நகரம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மணப்பாறை வட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியுள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மின் நிறுத்தம் மாற்றுத்தேதி பின்னா் அறிவிக்கப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் ஏ.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
மணப்பாறை நகர பகுதியில் மின் நிறுத்தம் இருக்காது எனவும், சுற்றுவட்டார பகுதிகளில் பெரியப்பட்டி, மரவனூா், சமுத்திரம், செவலூா், விடத்திலாம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதிகளில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







