மணப்பாறை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 26) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பி.பிரபாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மணப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதந்திர பராமரிப்புகள் நடைபெற இருப்பதால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மணப்பாறை நகரம், வெள்ளைக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தபுடையான்பட்டி, கண்ணுடையான்பட்டி, சிதம்பரத்தான்பட்டி, களத்துப்பட்டி, சேங்குடி, கே.உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசோ்பட்டி, மரவனூா், சமுத்திரம், சின்ன சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, பாலப்பட்டி, தெற்குசோ்பட்டி, மாகாளிபட்டி, கொட்டப்பட்டி, என்.புதூா், ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, செவலூா், குதிரைகுத்திபட்டி, விடத்திலாம்பட்டி, ஆண்டவா்கோயில், குமரப்பட்டி, சீகம்பட்டி, பூவம்பட்டி, மாதம்பட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
விடத்திலாம்பட்டி துணை மின் நிலையம்:
வேங்கைகுறிச்சி, மேல மஞ்சம்பட்டி, மலையடிப்பட்டி, பொன்னக்கோன்பட்டி, மாராட்சிரெட்டியபட்டி, நல்லாம்பிள்ளை, வீரப்பூா், அரசுநிலைபாளையம், அணியாப்பூா், விராலிபட்டி, செட்டியபட்டி, குளத்துராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா், அமையபுரம்.
பன்னாங்கொம்பு துணை மின் நிலையம்:
ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழப்பொய்கைபட்டி, புதுப்பட்டி, இராயன்பட்டி, காவல்காரன்பட்டி, அமையபுரம், சமுத்துவபுரம், ரெங்க்கவுண்டம்பட்டி, வலையப்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), திருமலையான்பட்டி, சாம்பட்டி, பண்ணாங்கொம்பு சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையாா்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி.அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைபட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.








