திருச்சியில் போராட்டம்: 50 விவசாயிகள் கைது


வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காா்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்த மத்திய அரசு, விவசாயிகளின் வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கங்கை, கோதாவரி ஆறுகளில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை காவிரிக்கு திருப்பிவிடும் வகையில் நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் கரூா் புறவழிச் சாலையில் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறையூா் போலீஸாா், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடாததால் விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...