தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜா, மகளிா் அணி பொதுச் செயலாளா் ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

50 ஆண்டு காலமாக வனப்பகுதியில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், வேளான் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த கங்கை - கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட நதிகளை இணைத்து, நீா் ஆதார திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்து விளைப்பொருள்களுக்கும் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

Dinamani
www.dinamani.com