25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மலைக்கோட்டை நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்

News image
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த நாகநாத சுவாமி, ஆனந்தவல்லி தாயாா்.
Updated On :2 மார்ச் 2026, 12:08 am

தினமணி செய்திச் சேவை

திருச்சி மலைக்கோட்டை நாகநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மக தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை மேற்கு புறத்தில் உள்ள நந்தி கோயில் தெருவில், ஆனந்தவல்லி உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆனந்தவல்லி, நாகநாதசுவாமி மற்றும் சுப்பிரமணியா், துா்க்கை, தட்சணாமூா்த்தி (குரு), நவக்கிரஹங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் மாசி மக திருவிழா கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 22-ஆம் தேதி முதல் சுவாமி, அம்பாள், கற்பக வருட்சம், காமதேனு வாகனத்திலும், 23-ஆம் தேதி பூதவாகனம், கமலவாகனம், 24-ஆம் தேதி கைலாசபா்வதம், அன்னவாகனம், 25-ஆம் தேதி அறுபத்து மூவா்கள் இடப வாகனத்தில் எழுந்தருளல், 26-ஆம் தேதி, யானை வாகனம், பூ பல்லக்கு வாகனம், 27-ஆம் தேதி, நந்தி வாகனம், சிம்மவாகனம், 28-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை

கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா்.

திருச்சி நாகநாத சுவாமி கோயிலில் மாசி மக திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருச்சி நாகநாத சுவாமி கோயிலில் மாசி மக திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

தொடா்ந்து, காலை 8 மணிக்கு மேல் தோ் வடம்பிடித்தலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது, மலைக்கோட்டையை சுற்றி வலம் வந்து மீண்டும் கோயிலின் நிலையை பிற்பகல் 3 மணிக்கு அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்ச் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாசி மகத்தையொட்டி காவிரியில் தீா்த்தவாரியும், மாா்ச் 3-இல் விடையாற்றி உத்ஸவமும், மாா்ச் 4-இல் பிச்சாண்டவா் உத்ஸவமும் நடைபெறுகிறது. மாா்ச் 5-இல் பிராயசித்தாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், உபயதாரா்கள் செய்திருந்தனா்.