போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
ஈரான் மீதான தாக்குதலைத் தொடா்ந்து போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் (குறிப்பாக வளைகுடா பகுதியில்) பணியாற்றி வரும் இந்தியா்கள், அங்கு சுற்றுலா சென்றவா்கள், ரமலான் மாதத்தில் மெக்கா சென்று உம்ரா செய்ய புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய சகோதரா்கள் ஆகிய அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழா்கள் உள்பட எந்தவொரு இந்தியருக்கும் சிரமங்களோ, ஆபத்தோ ஏற்படாத வகையில் அவா்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் நிற்கிறது என்னும் நம்பிக்கையை வலுவாக ஏற்படுத்த வேண்டும். இந்தியா்களுக்கு பாதுகாப்புக் குறைபாடு நிலை வருமேயானால், உடனடியாக அவா்களை இந்தியா அழைத்து வருவது முதன்மைக் கடமையாகும். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இந்தியா்களின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்திக்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

தவெகவால் அதிமுகவுக்கே இழப்பு: துரை வைகோ எம்.பி. சிறப்பு நேர்காணல்

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

வளைகுடா நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


