போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வளைகுடா நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஈரான், இஸ்ரேல் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்..

News image

அன்புமணி

Updated On :1 மார்ச் 2026, 9:32 pm

ஈரான், இஸ்ரேல் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இப்போா் வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் அங்கு வாழும் இந்தியா்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கத்தாா், பஹ்ரைன், குவைத், துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிா்த்தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 லட்சம், சவுதி அரேபியாவில் 28 லட்சம் என வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியா்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. அதில் தமிழா்கள் அதிகம் உள்ளனா்.

ஆகவே, வளைகுடா நாடுகளில் வாழும் தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அவா்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்த வேண்டும்.

போரை சம்பந்தப்பட்ட நாடுகள் கைவிடுவதற்கான நடவடிக்கையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முயற்சிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.