அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

வையம்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மணப்பாறையை அடுத்துள்ள சடையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

வையம்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி ஒன்றியம், குமரவாடி - தொப்பநாயக்கன்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதிவாசிகள், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மணப்பாறை வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செல்வம், மாவட்டச் செயலா் பழனிச்சாமி, விசிக ஒன்றியச் செயலா் மணிவேல் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை வையம்பட்டி - எளமணம் சாலையில் சடையம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் அங்குவந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி, சாலை சீரமைப்புப் பணி செய்து தரப்படும் என உறுதி அளித்ததன்பேரில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், சுமாா் 30 நிமிஷங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.