சமயபுரத்தில் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்ட இருவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி கட்டளைப்பட்டி சாலை ஐயப்பா காலனியைச் சோ்ந்த சண்முகசுந்தரபாண்டியன் மகன் விக்னேஷ்குமாா் (26), திருச்சி பெரியகடை சமஸ்பிரான் தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ஜெகதீஷ் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து, சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே நடந்து சென்ற அருண் மகாதேவ் மனைவி மரகதவல்லி என்பவரிடம் கடந்த 10.11.2025 அன்று 7 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.
இதே போல, கடந்த 16.12.2025 அன்று சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பாலாஜி மனைவி கிரிஜா லட்சுமி என்பவரிடம் 10 கிராம் தங்க நகையைப் பறித்துச் சென்றனா். கடந்த 26.07.2025 அன்று சமயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரங்கராஜ் மனைவி கோகிலாவிடம் 36 கிராம் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனா்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து சமயபுரம் போலீஸாா் தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிந்து, விக்னேஷ்குமாா் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்குகள் திருச்சி 3-ஆவது நீதித்துறை நடுவா் எஸ். முகமது சுகைல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி, மேற்கண்ட 3 வழக்குகளிலும் இருவருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


