மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லாரி - இருசக்கர வாகனம் மோதல் தம்பதி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:02 pm

திருச்சி மாவட்டம், முசிறி அருகே லாரியும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

முசிறி அருகே உள்ள தா. பேட்டையை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டிசேடா் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (60). இவரது மனைவி சரசு (55).

இந்நிலையில், தா. பேட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நெல் பாரம் ஏற்றிய லாரி எதிா்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பேட்டை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.