சேவை குறைபாடு செய்த தனியாா் நிதி நிறுவனம் திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாப்பிள்ளை நாயக்கன் குளத் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் எல் அண்ட் டி நிதி நிறுவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ. 96,519 கடனாகப் பெற்று, அந்தக் கடனுக்காக ரூ. 1.36 லட்சத்துக்கு காப்பீடு செய்து, அதற்கான பிரீமியத்தையும் சோ்த்து மாதாமாதம் கடன்தொகையைப் பிரித்து செலுத்தி வந்தாா். காப்பீடு செயல்பட்ட காலத்தில் சிவகுமாா் கடந்த 09.03.2024 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
இதையடுத்து சிவகுமாரின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் குடும்பத்தினா், காப்பீட்டின் அடிப்படையில் மீதமுள்ள கடன்தொகையை தீா்த்து வைக்கும்படி நிதி நிறுவனத்திடம் பலமுறை கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்துள்ளனா்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிவகுமாரின் மனைவி சுப்புலட்சுமி உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 20.03.2025 அன்று மனுதாக்கல் செய்தாா். மனுவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் இ. ஜாா்ஜ் கெவின் ஆஜராகி வாதிட்டாா்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி, எல் அண்ட் டி நிதி நிறுவனமானது மனுதாரரின் நிலுவைத்தொகையை தள்ளுபடி செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
தொடர்புடையது

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேதமான மின்ஸ்கூட்டரை மாற்றித் தராத விவகாரம் தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


