திருச்சி அருகே கடன் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சமஸ்பிரான் வீதியைச் சோ்ந்தவா் ஆா். சீனிவாசன் (34). இவா் திருச்சி பேரூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த பா. சக்திவேலிடம் (38) கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி, திருப்பித் தராமல் இருந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தனது வீட்டு வழியாகச் சென்ற சீனிவாசனை சக்திவேல் தடுத்து நிறுத்தி கடனைத் திருப்பிக் கேட்டு, கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த சீனிவாசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது
குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை: கணவா் கைது
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


