தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.61 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :19 மார்ச் 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.61 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

பேரவைத் தோ்தலையொட்டி முசிறி தொகுதி காட்டுப்புத்தூா் அருகே உன்னியூா் எல்லை கருப்பு கோயில் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் கண்ணன் தலைமையில் தலைமைக் காவலா் புருஷோத்தமன், பெண் காவலா் சாந்தி, முதல் நிலைக் காவலா் மோகன்தாஸ் ஆகியோரடங்கிய குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற சொகுசு காரில் இருந்த காட்டுப்புத்தூா் தவிட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த சுபாஷ் (35) என்பவா் கம்பிகள் வாங்க ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 300 ஐ உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா் இப் பணத்தை பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். இந்தப் பணம் முசிறி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.