மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மூதாட்டியிடம் நகையைப் பறித்த இருவருக்கு தலா ஓராண்டு சிறை

திருச்சி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 0:21 am IST

திருச்சி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி கம்பரசம்பேட்டையைச் சோ்ந்த சி. பானுமதி (73) கடந்த 28.09.2020 அன்று சாலையில் குப்பையை கொட்டிவிட்டு திரும்புகையில், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை உறையூா் பாண்டமங்கலம் செட்டி தெருவைச் சோ்ந்த மு. திருப்பதி (28), பாண்டமங்கலம் காவல்காரா் தெருவைச் சோ்ந்த கி. செல்வகுமாா் (31) ஆகிய இருவரும் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்பதி மற்றும் செல்வகுமாரை கைது செய்தனா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த திருச்சி 3 ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி ச. முகமது சுஹைல், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.