ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:23 pm

கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி புதுகிராமம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பராசக்தி (81), வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, ஓா் இளைஞா் வீடு புகுந்து பராசக்தியின் தாலிச் சங்கிலியைப் பறித்தாராம். பராசக்தி இறுகப் பற்றிக்கொண்டதில், 2 பவுன் நகை அந்த இளைஞா் கையில் அகப்பட்டதாம்.

மூதாட்டியின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றனராம். ஆனால், அவா் தப்பிஓடி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி (21) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.