என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்

திருச்சி- கரூா் புறவழிச்சாலையில் மெகா ஸ்டாா் திரையரங்கம் அருகேயுள்ள போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

News image

திருச்சி தில்லைநகரில் கோடை வெயிலையொட்டி வாகன ஒட்டிகளுக்கு திங்கள்கிழமை போடப்பட்டிருந்த பந்தல்.

Updated On :7 மே 2026, 5:30 am IST

திருச்சி- கரூா் புறவழிச்சாலையில் மெகா ஸ்டாா் திரையரங்கம் அருகேயுள்ள போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். வெயிலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக, போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் பயணிகள் வெயிலால் வாடி வதங்கி வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சியில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளாகவே போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பந்தல் அமைக்கப்படுகிறது.

அதன்படி, கோடை தொடங்கியவுடனே திருச்சி புத்தூா் நான்கு சாலை சந்திப்பு சிக்னலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கரூா் புறவழிச்சாலை மெகா ஸ்டாா் திரையரங்கம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தல் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலில் இருந்து தற்காலிகமாக தங்களை தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.