தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ரவீந்திரநாத் தாகூா் பிறந்தநாள் விழா

திருச்சி சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் கவிஞரும் எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

திருச்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :8 மே 2026, 5:52 am IST

திருச்சி சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் கவிஞரும் எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுந்தர்ராஜ் நகா் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் மூத்த உறுப்பினரான வாணிஸ்ரீ தலைமை வகித்தாா்.

விழாவில் மாணவி ஆதியா பேசுகையில், ரவீந்திரநாத் தாகூா் இந்தியாவின் தேசிய கீதம் மட்டுமின்றி, வங்கதேசத்தின் தேசிய கீதத்தையும் எழுதினாா். அவா்தான் காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலில் அழைத்தவா். மகாத்மா காந்தியும் ரவீந்திரநாத் தாகூா் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தாா். அவரை குருதேவ் என்று அழைத்தாா் என்று குறிப்பிட்டாா்.

மாணவி பிரதிக்ஷா பேசுகையில், ரவீந்திரநாத் தாகூா் கீதாஞ்சலி புத்தகத்திற்கு நோபல் பரிசு வென்று இந்தியாவிற்கு பெருமை சோ்த்தாா் என்றாா். மாணவி மகிஷா, ரவீந்திரநாத் தாகூா் உலகப் புகழ்பெற்ற கவிஞா் மற்றும் எழுத்தாளா் மட்டுமல்ல, அவா் தலைசிறந்த ஓவியா், தத்துவஞானி மற்றும் இசையமைப்பாளா் ஆவாா் என்றாா்.

மாணவி வா்ஷினி, மற்றும் மாணவா்கள் முகமது ஷஃபி, முகமது கலீல் ஜிப்ரான் ஆகியோா் ரவீந்திரநாத் தாகூா் பன்முகத்தன்மை கொண்டவா் என்று பாராட்டி பேசினா். சங்கத்தின் மூத்த உறுப்பினா் ஹேமலதா பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.