திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இனி மிதிவண்டி பயணம் செய்து பூங்கா முழுவதையும் மகிழ்ச்சியுடன் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மிதிவண்டி பயணத்துக்கான தொடக்க நிகழ்வு மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா தலைமையில், பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பூங்காவுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறாா்கள் பூங்காவுக்குள் இயற்கை சூழ்ந்த மரங்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் பாா்த்தபடியே செல்லும் வகையில் 1 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரும் வகையில் மிதிவண்டி பயணத்துக்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மிதிவண்டி பயணம் அறிமுக நிகழ்வை முன்னிட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மிதிவண்டி பயணத்துக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்டுகிறது. பின்னா், ஒரு மணிநேரத்துக்கு ரூ.10 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
மிதிவண்டியில் சுற்றி வரும்போது, பூங்காவில் உள்ள செடி, கொடிகள், வண்ணத்துப் பூச்சிகளுக்கு எந்தவித இடையூறோ, சேதமோ ஏற்படாத வகையில் சென்றுவர வேண்டும் என வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்

இந்திய மகளிா் ஹாக்கி அணி ஆஸி. பயணம்

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ரவீந்திரநாத் தாகூா் பிறந்தநாள் விழா

மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



