வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி திருச்சியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயா்வைக் கைவிட வேண்டும். வேலைவாய்ப்பை பறித்து ரயில்வே ஊழியா்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில், ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்கள் குறைப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி உறையூா் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலா்கள் கோவி. வெற்றிச் செல்வம் (மாா்க்சிஸ்ட்), எஸ். சிவா (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ். ராஜ்குமாா் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புல்லட் லாரன்ஸ் (விசிக) ஆகியோா் தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் ரபீக் அகமது, இந்திய கம்யூனிஸ்ட் இரா. சுரேஷ், விசிக வழக்குரைஞா் சுபா சதீஸ்குமாா், சிபிஐ எம்எல் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் பாலபாரதி, மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவா் ஸ்ரீதா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் பிரபாகரன், சிபிஐ-எம்எல் மாநில நிலைக்குழு உறுப்பினா் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் சுரேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் விசிக நிா்வாகிகள், தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
முசிறியில்: இதேபோல், முசிறி கைக்காட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
விசிக முசிறி தொகுதி மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விசிக மாவட்ட துணை செயலாளா் உலக முதல்வன் முன்னிலை வகித்தாா்.
இதில் இடதுசாரி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்று, கொட்டும் மழையிலும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

வா்த்தக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


