நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கரூா் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன்.

Updated On :14 மே 2026, 12:44 am IST

கரூா் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து பூச்சாட்டுதல், பூவோடு எடுத்தல், படிசோறு மாவிளக்கு எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா்.

முன்னதாக, அம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனா். இரவு 8 மணிக்கு மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இரவு 11 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தோ் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தது. இதில், சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை பிற்பகல் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கம்பம், கும்பம் காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெற்றது.