தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அக் கட்சியினா் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

உறையூா் குழுமணி பிரதான சாலையில் மீன்சந்தைப் பகுதியில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. மேலும், தென்னூா் அண்ணா நகா் பிரதான சாலையில் பள்ளி, மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தம் அருகேயும், புத்தூா் நான்கு சந்திப்பு சாலை பகுதியில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியிலும், வயலூா் சாலை சீனிவாச நகா் பிரதான சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயும் டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.

மேற்கண்ட பகுதிகளில் இயங்கிவரும் மதுக் கடைகளால் நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் குடிமகன்களால் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைதியிழந்து தவிக்கின்றனா். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மேற்கண்ட கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.