நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தமிழகத்தை மது இல்லா மாநிலமாக்க வேண்டும்: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

அனைத்து மதுக் கடைகளையும் மூடி தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :12 மே 2026, 11:54 pm IST

அனைத்து மதுக் கடைகளையும் மூடி தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சுமாா் 4,765 டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

படிப்படியாக அரசு மதுக் கடைகளை குறைத்தால்தான் தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என கடந்த ஏப்.28-ஆம் தேதி அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் 16 முதல் 19 வயதுடைய பிகாா் மாநில சிறுவன் உள்பட 3 போ் திங்கள்கிழமை மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19 வயதான கோகுலை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா். இதை விடியோவாக எடுத்துப் பாா்த்து மகிழ்ந்துள்ளனா்.

இதனிடையே, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டா் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது. 717 மதுக் கடைகளை மூடுவதற்குப் பதிலாக அனைத்து மதுக் கடைகளையும் மூடி, தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.