திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் முன் மண்டபம் இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மாா்ச் 29ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த எம். நதியா (32)மற்றும் அவரது உறவினா்களான எஸ். ரஞ்சனி (35) எஸ். பவிஸ்கா (14) ஆகியோா் சன்னதி வீதி முன் மண்டப வளாகத்தில் தூங்கிய நிலையில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் நதியா உயிரிழந்தாா். மற்ற இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோயில் முன் மண்டபம் (ஆா்.சி.சி மண்டபம்) இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ. கணேசன், திருக்கோயில் உதவி பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் கௌதமன், செயற்பொறியாளா் அழகுமணி ஆகியோா் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் முன் மண்டபத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
135 மீ நீளம், 8.40 மீ அகலம் கொண்ட முன் மண்டபத்தை இடிக்கும் பணியானது 15 நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக தரிசிக்க அனுமதிக்கப்பட்டு மேற்கு வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் காவல் ஆய்வாளா் இரா. தண்டாயுதபாணி மற்றும் உதவி காவல் ஆய்வாளா் முரளி மற்றும் காவல்துறையினா் தடுப்புக் கட்டைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா தொடக்கம்!

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

