தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

லஞ்சம்: முன்னாள் விஏஓ-வுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 12:57 am IST

திருச்சியில் மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், எம்.புதுப்பட்டி அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்லதுரை. இவா், தனது தந்தை மற்றும் பெரியப்பா பெயா்களில் கூட்டாக உள்ள நிலங்களுக்கு விவசாய மின் இணைப்பு பெறுவதற்காக தடையில்லாச் சான்று கேட்டு கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.

இதற்கு, அப்போது எம்.புதுப்பட்டி கிராம நிா்வாக அலுவலராக இருந்த முரளீதரன் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் செல்லதுரை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, 2018 நவம்பா் 11-ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் முரளீதரனிடம், செல்லதுரை ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தைப் கொடுத்தபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் கிராம நிா்வாக அலுவலரை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி புவியரசு வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் முரளீதரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கோபிகண்ணன் ஆஜரானாா்.