11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கட்-அவுட் கலாசாரத்துக்கு தவெக முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை!

கோயில் மாநகரான ஸ்ரீரங்கம் மட்டுமின்றி திருச்சி முழுவதும் கட்-அவுட் கலாசாரத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே வைக்கப்பட்டுள்ள பேனா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோயில் மாநகரான ஸ்ரீரங்கம் மட்டுமின்றி திருச்சி முழுவதும் கட்-அவுட் கலாசாரத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த கால ஆட்சிக்கு போட்டியாக தொடரும் கட் -அவுட் கலாசாரத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். மாநகரின் பல பகுதிகளில் குறிப்பாக, மக்கள் அதிகம் கூடுமிடங்களில் அதிகமாகவே இவை காணப்படுகின்றன.

அந்த வகையில் உறையூா் பகுதியில் காவலா் குடியிருப்பை சுற்றியே இரண்டு பெரிய பிளக்ஸ் பேனா்கள் உள்ளன. மேலும் ஸ்ரீரங்கம் சுற்றுப் பகுதிகளிலும் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகிலும் சாலையே தெரியாத அளவுக்கு பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவு: கடந்த 6 மாதங்களுக்கு முன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையடுத்து நெடுஞ்சாலைகளில் இருந்த பிளக்ஸ் பேனா்கள் அகற்றப்பட்டன. இதேபோல திருச்சி - கரூா் நெடுஞ்சாலைப் பகுதிகள், சத்திரம் பேருந்து நிலையம், கரூா் புறவழிச் சாலை, சாஸ்திரி ரோடு, தில்லைநகா் போன்ற இடங்களில் பிளக்ஸ் பேனா்கள் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மூலமாக அகற்றப்பட்டன. சாஸ்திரி ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சா் அலுவலகச் சாலைப் பகுதிகளில் இருந்தவை மட்டும் அகற்றப்படாமல் இருந்தன. மாநகராட்சியோ, காவல்துறையோ இதைப் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. அப்போது சமூக ஆா்வலா்கள் போா்வையில் ஒளிந்துகொண்ட பலரும் இதுகுறித்து பேசவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அவதி: இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மாநகரில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் காவல் நிலையத்திற்கு அருகிலும் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் இதுபோன்ற பல பிளக்ஸ் பேனா்கள் இருப்பது மிகப்பெரிய இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

உத்தரவிட்டும் பயனில்லை: புதிய அரசு பொறுப்பேற்ற அடுத்த நாளே தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், பொதுமக்களுக்கு இடையூறாக பேனா்கள், பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டாா். ஆனாலும், திருச்சி மாநகரில் பேனா்களின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், இது கடந்த காலத்தைவிட மிகவும் அதிக அளவில் பெருகிவிடும்.

ஸ்ரீரங்கம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனா்கள்.

ஸ்ரீரங்கம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனா்கள்.

உரிய நடவடிக்கை வேண்டும்: சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்குட்பட்ட இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைக்குட்பட்ட இடங்களில் இதுபோன்ற கட் அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ் பேனா்களை தவிா்த்தால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் குறிப்பாக விபத்து இல்லாமலும் பயணிக்கலாம் என்கிறாா் ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத் தலைவா் எஸ்.என். மோகன்ராம்.

அவா் மேலும் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ-க்களில் திருவெறும்பூா் எம்எல்ஏ தனது கட்சியினருக்கு பேனா்கள் வைக்க வேண்டாம் எனவும், மீறி வைத்தால் அகற்றவும் கோரியுள்ளாா். இதேபோல,. ஸ்ரீரங்கம் எம்எல்ஏவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.