பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:15 am IST

திருச்சி அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலூா் அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக பாலூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா். சுதாவுக்கு கடந்த திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில், ஜீயபுரம் போலீஸாா் சென்று காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவா் யாா் எனத் தெரியவில்லை.

புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.