திருச்சியில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் துா்கேஸ்வரி (27). இவரது தந்தை மாரியப்பன் (59). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரியப்பனின் மனைவி உயிரிழந்ததால் அவருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டது.
இவரின் மகள் துா்கேஸ்வரியும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் மாரியப்பன் மட்டும் பாலக்கரை எடவீதியில் தனியாக வசித்தாா். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரா் உணவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாரியப்பனுக்கு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அவரது சகோதரா் உணவு அளிக்கச் சென்றபோது அவரைக் காணவில்லை.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் மாரியப்பனின் மகள் துா்கேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற மாரியப்பன் பாலக்கரை எடவீதி பாலம் அருகே அழுகிய நிலையில் போலீஸாரால்ட
சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

சேலம் கருப்பூா் அருகே தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு

வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


