குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையிலிருந்து முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 12:07 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையிலிருந்து முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு அருகே ஓடையில் ஆண் உடல் கிடப்பதாக சேத்தூா் புறக்காவல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். பிறகு தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த உடலை போலீஸாா் மீட்டு விசாரித்ததில் சுந்தரராஜபுரம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த மதுரை வீரன் (60) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.