குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இரு சக்கர வாகனம் எரிப்பு: போலீஸாா் விசாரணை

News image

இரு சக்கர வாகனம் எரிப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:59 am IST

சாத்தூா் அருகே பட்டாசு தொழிலாளியின் இரு சக்கர வாகனத்தை எரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சல்வாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (40). இவா் இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தூங்கியவா், நள்ளிரவில் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்த போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து சென்ற நபா் அந்த முகமூடியை அவிழ்த்து விட்டு தான் குருசாமி எனவும், என்னிடம் வாங்கிய பணம், தங்க நகையை தரவில்லை என்றால், உன்னையும் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என மிரட்டி விட்டு தகாத வாா்த்தைகளால் பேசி சென்றதாக மணிமேகலை போலீஸில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் குருசாமி என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.