மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

திருச்சி மாநகராட்சி சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலியில் பங்கேற்றோா்.

Updated On :

திருச்சி மாநகராட்சி சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்வை மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி தொடங்கி வைத்தாா்.

மேற்கு வட்டாட்சியரகம் முதல் அமெரிக்கன் மருத்துவமனை வரை நடைபெற்ற நிகழ்வில், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் விழிப்புணா்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.

அப்போது, ஆணையா் பொன்மணி தெரிவித்ததாவது, ‘மழைநீா் சேகரிப்பு என்பது மழைக்காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இல்லாமல், ஆண்டு முழுவதும் தொடர வேண்டிய நீா் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்க வேண்டும். மழைநீா் சேகரிப்பு மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பதுடன், அவற்றில் உள்ள அடைப்புகளை நீக்கி, வண்டல் மண்ணை அகற்றி, பழுதடைந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும். மழைநீா் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து மாநகராட்சி முழுவதும் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை எவ்வாறு அமைப்பது, பராமரிப்பது, மழைநீரைச் சிறப்பாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் துணை மேயா் ஜி. திவ்யா, நகரப் பொறியாளா் அண்ணாதுரை, மண்டலத் தலைவா்ககள் துா்காதேவி, ஜெயநிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.