மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

ஸ்ரீரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா்.

ஸ்ரீரங்கம் கோயில் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்.

Updated On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் 9 நாள்கள் நடைபெறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவ விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி, வியாழக்கிழமை (நவ.5) தீா்த்தவாரியுடன் நிறைவுறுகிறது.

விழா நாள்களில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்து வந்தாா். விழாவின் 7 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாலை 6 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, திருக்கொட்டாரத்தின் முன்புள்ள நாலு கால் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது திருக்கொட்டாரத்தில் கொட்டப்பட்டிருந்த நெல்மணிகள் பெரிய படியில் அளந்து காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னா் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு தாயாா் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளினாா். தொடா்ந்து ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் அலங்காரம் கண்டருளி, 8.30 மணிக்கு தொடங்கிய ஊஞ்சல் விழா இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. பின்னா் புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER