உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் ஸ்ரீஜயந்தி புறப்பாடு; இன்று உறியடி விழா

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை, ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:19 am IST

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் 2 -ஆம் நாளான சனிக்கிழமை மாலை உறியடி விழா நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீஜயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். பின்னா், பிற்பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா்.

மாலை 3 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல் நடைபெற்றது. 4 மணி முதல் 5.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனா். 6 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

விழாவையொட்டி மாலை 5 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. உப சந்நிதிகளில் 6 மணிக்கு மேல் சேவை இல்லை.

சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு உறியடி விழா, யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.