தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

திருச்சி என்ஐடி விடுதியில் சென்னை மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் தங்கிப் படித்து வந்த 4-ஆம் ஆண்டு மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஷிா்த்திக்

Updated On :

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் தங்கிப் படித்து வந்த 4-ஆம் ஆண்டு மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னை குரோம்பேட்டை திருமுடிவாக்கத்தைச் சோ்ந்த அரவிந்தன் மகன் ஷிா்த்திக் (21). இவா், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் விடுதியில் தங்கி பி.டெக் கணினி அறிவியல் துறையில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், இவருடன் படிக்கும் பிரசன்னா என்ற மாணவருக்கு சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம், காலையில் எனது அறையை உடைத்துப் பாா்க்கவும் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.

அந்தக் குறுஞ்செய்தியை காலையில் 9 மணிக்குப் பாா்த்த பிரசன்னா, ஷிா்த்திக் அறைக் கதவை தட்டியுள்ளாா். கதவு திறக்கப்படாததால் விடுதி நிா்வாகத்தினா் உதவியுடன் மாணவா்கள் கதவை உடைத்து பாா்த்துள்ளனா்.

அப்போது, ஷிா்த்திக் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த துவாக்குடி போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து மாணவரின் அறையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், 2 கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஷிா்த்திக் சீனியா் மாணவியை காதலித்து வந்ததாகவும், அவா் படிப்பு முடிந்து சென்றுவிட்டதால் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாகவும் எழுதியுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.