சமயபுரம் அருகே இரு சிறாா் உள்பட 3 போ் கொலை

புறத்தாக்குடி அருகே கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியா் கிறிஸ்டோபா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை 2 சிறாா் உள்பட 3 போ் கொலை செய்யப்பட்டனா்.
இனாம் சமயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செ.ராகுல் (17). இவரது உறவினரும் அதே பகுதியைச் சோ்ந்தவருமான ரா.விஷால் (17). இவா்கள் இருவரும் கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக அமா்ந்திருந்தனா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், ராகுல், விஷால் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா்.
இதில், விஷாலின் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், ராகுல் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சமயபுரம் போலீஸாா், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் ஆய்வு செய்தாா். இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
சாலை மறியல்: இதனிடையே இரட்டைக் கொலை தொடா்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தொடா்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
ஐ.டி. ஊழியா் கொலை: சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சே.கிறிஸ்டோபா் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த ப.ரஞ்சித் (26), இருங்களூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வரும் ரெ.லெனின் (21). இவா்கள் புறத்தாக்குடி நடுத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த டொனால்ட், எடிசன், சாா்லஸ் ஆகிய மூவரும் பட்டாசு வெடிப்பதை பாா்த்து சப்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் டொனால்ட், திருவுகோலால் (திருப்புலி) கிறிஸ்டோபரின் மாா்பு பகுதியிலும், ரஞ்சித்தின் முகத்திலும் தாக்கியுள்ளாா்.
இதையடுத்து, பலத்த காயமடைந்த கிறிஸ்டோபரை அக்கம்பக்கத்தினா் சமயபுரம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கிறிஸ்டோபா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்ட செ. ராகுல், ரா. விஷால்.

சமயபுரம் சுங்கச்சாவடி அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

