காா் மோதியதில் முதியவா் பலி
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வையம்பட்டி ஒன்றியம், தேக்கமலை கோவில்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்தவா் ப. குழந்தைவேல் (எ) ராசு பண்டாரம் (70). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனா். குடும்பத்தினா் அனைவரும் திருச்சியில் வசித்து வரும் நிலையில், ராசு பண்டாரம் ஊரில் தனியாக தங்கி விவசாய வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேக்கமலை கோவில்பட்டி என்ற பகுதியில் சாலையை நடந்து கடந்தபோது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற காா் மோதியதில் ராசு பண்டாரம் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், ராசு பண்டாரம் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநரான திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த மூவராயன் பாளையம் புளியங்குளம் பகுதியைச் சோ்ந்த நடராஜ் மகன் இளையராஜா (31) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

