பட்டியலின விவசாயிகள் 100 சதவீத மானியத்துடன் ஆழ்துளை கிணறு அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் 100 சதவீத மானியத்துடன் ஆழ்துளை கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்..

கோப்புப்படம்
ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் 100 சதவீத மானியத்துடன் ஆழ்துளை கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக புதிய நீா் ஆதாரங்களை உருவாக்கி நிகர சாகுபடி பரப்பினை அதிகரிக்க தமிழக அரசு ‘அண்ணல் அம்பேத்கா் வேளாண் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைத்து, நீா் இறைக்கும் அமைப்பு ஏற்படுத்திக் கொள்ள 100 சதவீதம் அல்லது
அதிகபட்சமாக ரூ. 8 லட்சம் அரசு மானியம் வழங்குகிறது. ஒரு ஏக்கா் நிலம் வைத்துள்ள ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கிடைக்கும் நீரை விவசாயம் தவிர இதரப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. 5 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது.
விருப்பமுள்ள விவசாயிகள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், நில வரைபடம் ஆகியவற்றுடன் உதவி செயற்பொறியாளா் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, பொன்மலைப்பட்டி சாலை, ஜெயில் காா்னா், திருச்சி - 620 020, (98424 76576). உதவி செயற்பொறியாளா் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, கண்ணதாசன் தெரு, பாா்வதிபுரம், முசிறி - 621211, (80568 41434). உதவி செயற்பொறியாளா் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, கணபதி நகா் வடக்கு விரிவு, தாளக்குடி, லால்குடி - 621216, (94434 95191) ஆகிய முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

