திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

வயலூரில் நாளை சூரசம்ஹாரம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

வயலூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :

வயலூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ள சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நவ.15 காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்:

திருச்சி நகரிலிருந்து வயலூா் சாலை வழியாகச் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், கனரக வாகனங்கள் அல்லித்துறை, அதவத்தூா் வழியாக வயலூா் சாலையை அடைய வேண்டும்.

பக்தா்களின் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு அரசுப் பேருந்துகளும் இந்த மாற்றுப் பாதையிலேயே இயக்கப்படும். கரூா், கோப்பு மற்றும் ஜீயபுரம் பகுதிகளிலிருந்து வயலூா் சாலை வழியாகத் திருச்சி நகரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் கோப்பு, குழுமணி, பேரூா் மற்றும் உறையூா் வழியாக திருச்சி நகரத்தை அடைய வேண்டும். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.