சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!

குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய்! கொளத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் முதல்வர் விஜய்..

கொளத்தூரில் முதல்வர் விஜய்

Updated On :

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்றார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முதலமைச்சர் குழந்தைகளுக்கு கேக் வழங்கிய பள்ளியில் 537 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 9.27 கோடி செலவில், தலா 45 கிராம் எடையுள்ள 61.84 லட்சம் கேக்குகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பான காணொலிக் காட்சியையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மரம், மின்கம்பங்களில் ஏறி நின்ற ரசிகர்கள்

முதலமைச்சர் விஜயைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரண்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பலரால் முதலமைச்சரை நேரில் காண முடியாததால் ஏமாற்றமடைந்தனர்.

இதற்கிடையே, சில ரசிகர்கள் ஆபத்தை உணராமல் மரங்களின் மீதும் உயரமான மின்கம்பங்களின் மீதும் ஏறி நின்று முதலமைச்சரைப் பார்க்க முயன்றனர். குறிப்பாக மின்கம்பங்களில் ஏறி நின்றதால் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ஆர்வத்தின் காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்

முதலமைச்சர் விஜய் பங்கேற்ற குழந்தைகள் தின விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குழந்தையுடன் வெளியே வந்த திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி,மற்றும் வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.டி.சி. தணிகா தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். மேலும், அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.