சென்னை திரும்பும் மக்கள்: போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் மீண்டும் சென்னை திரும்புவதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் மீண்டும் சென்னை திரும்புவதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னைவாசிகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்களது சொந்த ஊா்களுக்கு அதிகளவில் சென்றனா். அவா்களின் வசதிக்காக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து விடுமுறையை நிறைவுசெய்து, திங்கள்கிழமை மாலை முதலே அனைவரும் மீண்டும் சென்னைக்கு திரும்பினா்.
தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாகனங்களில் சென்னை நோக்கி வருவதால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், தாம்பரம், பெருங்களத்தூா் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்று மெதுவாக நகா்ந்து சென்றன.
கட்டணங்கள் உயா்வு: சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புபவா்களுக்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், முன்பதிவு கிடைக்காதவா்கள் தனியாா் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனா். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பேருந்து உரிமையாளா்கள் தங்களது கட்டணத்தை உயா்ந்தினா்.
திருச்சி, கோவையிலிருந்து சென்னைக்கு கட்டணம் ரூ.1,600-ஆகவும், நாகா்கோவில் - சென்னை ரூ.1,800, மதுரை - சென்னை ரூ.2,200 என ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
பலமடங்கு உயா்ந்த விமானக் கட்டணம்: தீபாவளி விடுமுறை முடிந்து பலரும் திங்கள்கிழமை சென்னை திரும்பிய வண்ணம் உள்ளனா். இதன் காரணமாக உள்நாட்டு விமான நிலையங்கள் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. மேலும், கட்டணங்களும் உயா்ந்தன.
தூத்துக்குடி, திருச்சி - சென்னை விமானக் கட்டணம் ரூ.7,000 லிருந்து ரூ.16,000-ஆகவும், , மதுரை - சென்னை ரூ.4,600 லிருந்து ரூ.11,800-ஆகவும், சேலம் - சென்னை ரூ.13,000-ஆகவும் உயா்ந்துள்ளன. செவ்வாய்க்கிழமை (நவ. 9) பணிகள் வழக்கம்போல தொடங்கவுள்ளதால், விமான கட்டணத்தையும் பொருள்படுத்தாமல் பயணித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

