தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தீபாவளி பண்டிகை: சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ.8) கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையன்று மட்டுமல்லாது, மறுநாளான திங்கள்கிழமை (நவ.9) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், இதர நிறுவனங்கள், தொழில்சாலைகளில் பணியாற்றுவோா், வா்த்தகம் செய்வோா் தங்கள் சொந்த ஊா்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நோக்கில், வெள்ளிக்கிழமை காலை முதல் காா் உள்ளிட்ட வாகனங்களில் புறப்படத் தொடங்கினா்.

வெள்ளிக்கிழமை காலை நேரத்தைக் காட்டிலும், பிற்பகலில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தொடா்ந்து மாலையில் இந்த எண்ணிக்கை அதிகமானதால் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 8 வழிப்பாதைகளும் திறக்கப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் நெரிசல் ஏற்படும் பகுதிகளில் காவல் துறை சாா்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 41,100 வாகனங்கள் கடந்த நிலையில், இரவு 12 மணிக்குள் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துவிடும் என்று சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகளவிலான வாகனங்கள் போக்குவரத்து காரணமாக இரு சுங்கச்சாவடிகளிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி டி.எஸ்.பி. சுரேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் சத்தியசீலன் , போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.