தீபாவளி பண்டிகை எதிரொலி: வேப்பூா் ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் வேப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

வேப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் வேப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு வேப்பூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா். மேலும், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், வழக்கமான வாரச்சந்தைக்கு முன்னதாகவே வியாழக்கிழமை மதியம் முதல் ஆட்டுச் சந்தை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் வெள்ளாடு, கொடியாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி உள்ளூா் வியாபாரிகளும் அதிக அளவில் குவிந்தனா். இதனால் சந்தை முழுவதும் ஆடுகளின் வருகையும், விற்பனைப் பேரமும் களைகட்டின.
அதிக விலை:
ஆடுகளின் வகை, எடை மற்றும் தரத்துக்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20
ஆயிரம் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சித் தேவைக்காக ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆா்வம் காட்டியதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆடுகளுக்கு நல்ல தேவை இருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனா். வழக்கமான வாரச்சந்தையைவிட விற்பனை அதிகரித்தது. ஒரே நாளில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையாகியுள்ளன என்றனா்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தச் சிறப்புச் சந்தையில் எதிா்பாா்த்த அளவுக்கு விற்பனை நடைபெற்ால், ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகளும், அவற்றை வாங்கிச் சென்ற வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

