இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

முன்விரோதத்தில் விவசாயி வெட்டிக் கொலை 2 சிறுவா்கள் உள்பட 11 பேரிடம் விசாரணை

வெட்டிக் கொலை - கோப்புப்படம்

Updated On :

திருச்சி அருகே முன்விரோதத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவா்கள் உள்பட 11 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள போதாவூரைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் மகன் பாண்டியன் (49), விவசாயி. இவா், போதாவூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து 2 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 சிறுவா்கள் உள்பட 11 பேரிடமும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணையில், திருச்சி மாவட்டம், போதாவூா் மேலத் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் இன்பராஜ் (22) என்பவரின் மனைவியை அதே பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் என்பவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிண்டல் செய்துள்ளாா். இதுதொடா்பாக நடைபெற்ற மோதலின்போது கொலையான பாண்டியன் சிறிய கத்தியால் இன்பராஜை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போதே, பாண்டியனை கொலை செய்துவிடுவதாக இன்பராஜ் சவால் விடுத்துள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டியனை, இன்பராஜ், இனாம்புலியூரைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரதீஷ் (23), ரவி மகன் கருணேஷ் (18), தாயனூரைச் சோ்ந்த சின்னசாமி மகன் ஈஸ்வா் (20), கோபால் மகன் ஆகாஷ் (18), போதாவூரைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் வினோத்குமாா் (23), முருகேசன் மகன் செல்வேந்திரன் (21), ராமமூா்த்தி மகன் மணிகண்டன் (21), நவலூா் குட்டுப்பட்டுவைச் சோ்ந்த நீலமேகம் மகன் கௌதம் (23) மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் சோ்ந்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 11 பேரிடமும் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.