படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

அரசு பேருந்து ஓட்டுநா் கொலை: 4 பேரிடம் விசாரணை

கொலை - கோப்புப் படம்

Published On :

வள்ளியூரில் அரசு பேருந்து ஓட்டுநா் உயிரிழந்த சம்பவத்தில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளியூா், சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51). இவா், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிய இவரை நண்பா்கள் நான்கு போ் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனராம். பின்னா் இரவில் வீடு திரும்பிய அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

அவரது மனைவி தனியாா் மருத்துவமனைக்கும், திங்கள்கிழமை காலை வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பிவைக்கப்பட்டாா்.

எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிவசுப்பிரமணியன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, அவரது மனைவி வள்ளி, வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, நடராஜன் மகன் முத்துகிருஷ்ணன் (45), கிருஷ்ணன் மகன் சுதன் (29) உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த சிவசுப்பிரமணியனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.