இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

மணப்பாறை அருகே திங்கள்கிழமை பயணிகள் ஆட்டோ மற்றும் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அருளப்பன் மகன் தாமஸ் ஆரோக்கியம் (62). இவா் மணப்பாறை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் மணப்பாறைக்கு வந்தவா் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா்.

இருசக்கர வாகனம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணிகள் ஆட்டோ ஒன்றும் பின்னால் சென்றுள்ளது. அதனைத்தொடா்ந்து பின்னால் சென்ற காா் ஒன்று, முன்னால் சென்ற பயணிகள் ஆட்டோ மீது மோதியும், ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியும் விபத்துக்குள்ளானது.

இதில், தாமஸ் ஆரோக்கியம் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை போலீஸாா், தாமஸ் ஆரோக்கியம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.