குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

சட்டம் - ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும்: வீரபாண்டியன்

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன். உடன் நிா்வாகிகள்.

Updated On :

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருச்சி உறையூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகக் குழு, மாவட்டச் செயலா்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் கூறியதாவது:

பிரதமரை வைத்துக் கொண்டு கா்நாடகத் துணை முதல்வா் டி.கே. சிவக்குமாா், மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவேன் எனப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. பிரதமரைச் சந்திக்க தில்லியில் முகாமிட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த மூன்று அமைச்சா்கள் தமிழகத்துக்கான உரிய நிதியைப் பெற்று வர வேண்டும்.

போராட்டத்தில் பங்கேற்ற்காக விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம். அதே சமயம், தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலைவாசி உயா்வைத் தடுக்க வேண்டும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டும், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தியும், ‘மாற்றம் அவசியம்’ என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் டிச. 1, 2, 3 ஆகிய தேதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பொதுவெளியில், பொதுவாழ்வில் உள்ள சு. வெங்கடேசன் பற்றி விமா்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது, விலைவாசி உயா்வு, சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஆகியவை குறித்து தமிழக முதல்வா் வாய்திறந்து பேச வேண்டும்.

திமுகவிடமிருந்து பெறப்பெற்ற நிதியை திமுகவினா்தான் செலவு செய்தனா். நாங்கள் தொழிலாளி வா்க்கத்திடமிருந்து மட்டுமே நிதியைப் பெறுகிறோம். பெருமுதலாளிகளிடமிருந்து நாங்கள் நிதி வாங்குவதில்லை என்றாா் வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.