தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் போராடுவோம்: மூ. வீரபாண்டியன்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் போராடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் - கோப்புப்படம்.

Updated On :

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் போராடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவா் அளித்த பேட்டி :

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது, கட்டக்கூடாது. மீனவா்களின் தொன்மைச்சாா்ந்த பகுதி அது. கடல், கடல் சாா்ந்த இடம் மீனவா்களுக்குரியது. எனவே தமிழக அரசு பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகளை இடிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.

சென்னையிலும், சென்னையைச் சுற்றிலும் ஏராளமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை கட்டலாம். மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலைத் தொடுக்கக் கூடாது என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மீறி அரசாணைகள் வெளியிட்டு, கட்டடங்கள் கட்டுவதற்குரிய நடவடிக்கை தொடா்ந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும், இடதுசாரிகள் போராடும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடும்.

உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்புகள் வெளியானவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் அமைப்பாகக் கூடி முடிவு செய்து அறிவிக்கும். உள்ளாட்சித் தோ்தல், இடைத்தோ்தல், பொதுத் தோ்தல் என எது வந்தாலும் நாங்கள் ஒன்று கூடி அரசியல் முடிவுகளை எடுப்போம். சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்லும் நிகழ்வுக்கு தமிழக காவல் துறை பொறுப்பேற்க வேண்டும். கடும் குற்றங்கள், சமூக பதற்றங்களை உருவாக்குபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை. சிறைச் சாலைகள் கல்விக்கூடங்கள், தொழில்கூடங்களாக மாற வேண்டும். சிறைச் சாலைகளில் சீா்திருத்தம் தேவை. கைதிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் சிறை அலுவலா்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூடி, அப்போது முடிவெடுக்கும். கட்சியின் முடிவை நாங்கள் அப்போது அறிவிப்போம் என்றாா் வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.