தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கட்டடக் கழிவுகளை முறையாக அகற்றாவிடில் அபராதம்

திருச்சி மாநகரில் சாலையோர கட்டடக் கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி எச்சரித்துள்ளாா்.

அபராதம் - சித்திரிப்பு

Published On :

திருச்சி மாநகரில் சாலையோர கட்டடக் கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் கட்டட உரிமையாளா்கள், தங்கள் கட்டடத்துக்கு முறையாக மாநகராட்சியிடம் முன்அனுமதி பெற்று கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். கட்டடத்தின் வரைபடம் மற்றும் மாநகராட்சி அனுமதி பெற்ற விவரத்தினை கட்டடம் கட்டும் முன்பு பதாகை வைக்க வேண்டும்.

மேலும், கட்டுமானப் பணி நடைபெறும் இடம் எதிரே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக கட்டுமான பொருள்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை சாலையில் கொட்டி வைத்து பணிகள் மேற்கொள்வதை தவிா்க்க வேண்டும்.

மாநகரில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கொட்டப்படும் கட்டுமானப் பொருள்கள், தற்காலிக கொட்டகை மற்றும் கட்டட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.